செய்திகள்

மணி ரத்னம் படத்திலிருந்து விலகுகிறாரா முன்னணி நடிகர்?

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் மணி ரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ்

சினேகா

காற்று வெளியிடைக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது. தலைப்பு இன்னும் முடிவாத நிலையில், இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. 

மணி ரத்னத்தின் முந்தைய படமான காற்று வெளியிடையில் கதாநாயகியாக நடித்த அதிதி ராவ் அண்மையில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து அதிதி கூறியது, ‘மணி சார் படத்தில் மீண்டும் நடிக்கிறேன். காற்று வெளியிடை படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன். இப்போது மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தமுறை தமிழில் நானே சொந்தக் குரல் பேச முடிவெடுத்துள்ளேன்’ என்றார். 

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஃபகத் ஃபாசில் படத்திலிருந்து விலகப் போவதாக கோலிவுட் வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தேதி பிரச்னைகளால் இம்முடிவை ஃபகத் எடுத்துள்ளார் என்றும் தெரிகிறது. ஆனால் படக்குழுவினரிடமிருந்து இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஃபகத்திற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதும் முடிவாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT