முகப்பு
செய்திகள்

அஜித் நடிப்பில் சிவா இயக்கவுள்ள விசுவாசம்: கதாநாயகியாக நயன்தாரா தேர்வு!

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

அஜித் - சிவா மீண்டும் இணையும் விசுவாசம் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பு மார்ச் முதல் ஆரம்பமாகவுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம்  படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித். 

இதற்கு முன்பு சிவாவின் இயக்கத்தில் நடித்த மூன்று படங்களும் நல்ல வசூலை அடைந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்நிலையில் பில்லா, ஆரம்பம், ஏகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்துடன் ஜோடி சேரவுள்ளார் நயன்தாரா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறம் உள்ளிட்ட கதாநாயகி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா நடித்துவந்தாலும் இன்னொரு பக்கம் பிரபல கதாநாயகர்களின் படங்களிலும் தவறாமல் இடம்பிடிக்கிறார். இதனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக அவர் நீடித்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.