ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி!
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தான் இயக்கும் படத்துக்கு ஜிப்சி என தலைப்பிட்டுள்ளார் இயக்குநர் ராஜூ முருகன்...
குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தான் இயக்கும் படத்துக்கு ஜிப்சி என தலைப்பிட்டுள்ளார் இயக்குநர் ராஜூ முருகன்.
ஒலிம்பியா மூவீஸ் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். முதலில் இந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவரால் தேதிகள் ஒதுக்கமுடியாததால் அந்த வாய்ப்புக்கு ஜீவாக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
ஜிப்சி என்றால் நாடோடிகள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். சமூகப் பிரச்னை ஒன்றை எடுத்து அதை பெரிய பட்ஜெட்டில் சொல்லவுள்ளேன். கதையைப் பற்றி இப்போதைக்கு மேலும் எதுவும் கூறமுடியாது என்று ராஜூ முருகன் கூறியுள்ளார். பாலா இயக்கும் வர்மா படத்தில் ராஜூ முருகன் வசனம் எழுதுகிறார்.