முகப்பு
செய்திகள்

நடிகை பிந்துகோஷுக்கு விஷால் ரூ. 5 ஆயிரம் நிதியுதவி!

மூத்த நடிகை பிந்துகோஷ் மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் செய்தி வெளியானது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:11 PM
பகிர்:

மூத்த நடிகை பிந்துகோஷ் மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் செய்தி வெளியானது. 

இதையடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் தற்போது ரூ. 5 ஆயிரம் வழங்கியுள்ளார். இதைத்தவிர மாதந்தோறும் ரூ. 2500  உதவித்தொகை வழங்கவும் உறுதியளித்துள்ளார். 

மேலும், பிந்துகோஷ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத காரணத்தால் அவரை சங்கத்தில் இணைக்கவும் அதன் மூலமாக மேலும் பல உதவிகள் வழங்கிடவும் முயற்சி மேற்கொள்ளவுள்ளார். விஷாலின் உதவித்தொகையை பிந்துகோஷிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கியதாகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.