முகப்பு
செய்திகள்

பேட்மேன் பட வெளியீட்டை முன்னிட்டு சத்யம் திரையரங்கத்தின் புதிய ஏற்பாடு!

பெண்களுக்கான சானிடரி நாப்கினை அரசாங்கம் இலவசமாகத் தரவேண்டும் என்று அக்‌ஷய் குமார் சமீபத்தில் வேண்டுகோள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:12 PM
பகிர்:

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

பெண்களுக்கான சானிடரி நாப்கினை அரசாங்கம் இலவசமாகத் தரவேண்டும் என்று அக்‌ஷய் குமார் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வுக்காக சேனிடரி நாப்கினுடன் உங்களால் ஒரு புகைப்படம் எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் வெளியிடமுடியுமா என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் நாப்கினைக் கையில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்து அதைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வுக்குத் தங்களால் ஆன உதவியைச் செய்தார்கள். 

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சத்யம் சினிமாஸ் நிறுவனம், தனது திரையரங்குகளில் இலவசமாக சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக சத்யம் திரையரங்குகளில் உள்ள பெண்கள் கழிவறைகளில் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து சானிடரி நாப்கின்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.