செய்திகள்

காதலர் தினப் பரிசாக ரசிகர்களுக்கு உலக அழகி மனுஷி சில்லர் தந்த பரிசு என்ன தெரியுமா!

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியான 17 ஆண்டுகள் கழித்து  உலக அழகியாக இந்தியாவிலிருந்து தேர்வானார் மனுஷி சில்லர்.

சினேகா

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவுக்குப் பிறகு, நீண்ட இடைவெளியான 17 ஆண்டுகள் கழித்து  உலக அழகியாக இந்தியாவிலிருந்து தேர்வானார் மனுஷி சில்லர். அவ்வகையில் இந்தியாவுக்கு மீண்டும் அழகு மகுடம் சூட்டிப் பெருமை சேர்த்தவர் இவர்.

உலகம் முழுவதுமான மீடியாவின் உடனடி கவனத்தைப் பெற்றுவிட்ட மனுஷியை திரைப்படங்களில் நடிக்குமாறு பாலிவுட் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மனுஷி ஒரே ஒரு பேட்டியில் நடிகர் அமிர்கானுடன் நடிக்க விருப்பம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். 

நடிகைகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவது தான்  இன்றைய ட்ரெண்ட். உடை, சூழல் ஆகிவற்றை மாற்றி தினமும் வெவ்வேறு போஸ்களில் படங்களை அப்லோட் செய்து வருகின்றனர்.

போலவே, உலக அழகி மனுஷியும் தனது படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

காதலர் தின ஸ்பெஷலாக தற்போது பிகினி உடையில் தனது படத்தை ‘சம்மர் வைப்ஸ்’என்ற குறிப்புடன் பகிர்ந்திருக்கிறார் மனுஷி.

மேலும் உலகப் புகழ்ப்பெற்ற ஆங்கில இதழான காஸ்மாபாலிட்டனின் அட்டை படத்தை அலங்கரித்த புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார் இந்த உலக அழகி.

இவை உடனடியாக இணையத்தில் வைரலாகி இதுவரை 422,664 லைக்குகளைப் பெற்றுள்ளது. அவரது ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பின்னூட்டமாக மனுஷியின் பதிவில் எழுதி தங்கள் அன்பைத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவியான மனுஷி, பயிற்சி பெற்ற குச்சிப்புடி நடனக் கலைஞராவார். தற்போது சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக அக்கறையுடன் பல்வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக மாதவிடாய் சமயத்தில் பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை வழங்கி வரும் ஆர்வலராகச் செயல்படுகிறார் மனுஷி. தற்போது இதுகுறித்து உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT