கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மெர்குரி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி....
இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் - மெர்குரி.
பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு - திரு.
கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாகவுள்ளது. ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.