செய்திகள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில்... 

எழில்

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்து வருகிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்காக சமந்தா சிலம்பம் கற்றுக்கொண்டுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 12-வது படம். விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சீமராஜா என்கிற படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. முதல் தோற்ற போஸ்டரும் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT