செய்திகள்

இயக்குநர் மணி ரத்னத்தின் செக்கச் சிவந்த வானம்’படத்தில் மலையாள நாயகன்

காற்று வெளியிடைக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமான செக்கச் சிவந்த வானம்

உமாகல்யாணி

காற்று வெளியிடைக்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17-வது படமான செக்கச் சிவந்த வானத்தில் ஜொலிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, அருண் விஜய், தியாகராஜன், மன்சூர் அலிகான், சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ், ஜெய சுதா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா ஆகியோர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத். 

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றது.  இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த ஃபகத் ஃபாசில் கால்ஷீட் பிரச்னைகளால் இப்படத்திலிருந்து விலகினார் தற்போது. ஃபகத்திற்கு பதிலாக அங்கமாலி டைரீஸ் என்ற படத்தில் நடித்த அப்பாணி சரத் குமார் மேற்சொன்ன நட்சத்திர கூட்டத்தில் கலக்கவிருக்கிறார்.

அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்ற சரத், அதன் பின் அப்பாணி என்ற அடைமொழியுடனே தன் திரைப் பயணத்தைத் தொடர்கிறார்.

தற்போது சண்டை கோழி 2 படத்தில் நடித்து முடித்துவிட்ட அப்பாணி சரத் கோலிவுட்டில் களம் இறங்கத் தயாராகி விட்டார். ஒடியன் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் அப்பாணி சரத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவூா் அருகே ‘மேல திருப்பதி’ மொண்டிபாளையம்! வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மூவா் கொலை வழக்கு: இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை -சென்னை காவல் துறை தகவல்

கோபி அருகே டி.என்.பாளையம் வனச்சரகங்களில் இறைக்கொல்லி பறவைகள் கணக்கெடுக்கும் பணி

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி ஏப்ரல் 30-க்குள் நிறைவடையும்!

நாளைய மின்தடை: கருவலூா்

SCROLL FOR NEXT