கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி மூலமாகத் தனக்கான துணையைத் தேர்வு செய்ய களமிறங்கியுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சி நேற்று முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 பெண்களில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்யவுள்ளார்.
ஆர்யாவின் இந்த முயற்சிக்கு அவருடைய நெருங்கிய நண்பர்களும் திரையுலகப் பிரபலங்களும் ஆதரவும் வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்கள். ட்விட்டரில் அவர்கள் கூறியதாவது:
நடிகை சுனைனா: அற்புதமான மனிதர் நீங்கள். உங்களை யார் தான் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள் ஆர்யா? நல்ல மனதுடைய பெண்ணைத் தேர்வு செய்ய வாழ்த்துகள். சிறந்த மணமகளை அடைவீர்கள்.
நடிகை மற்றும் விஜே ரம்யா: அடடே... உங்கள் அருகில் யார் அமரப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் கனவுப் பெண்ணை அடைய வாழ்த்துகள்.
டிடி: வாழ்த்துகள் ஆர்யா. அனைத்துக்கும் வாழ்த்துகள்.
நடிகை பிரியாமணி: பாராட்டுகள் மற்றும் ஆல் தி பெஸ்ட்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.