முகப்பு
செய்திகள்

அமெரிக்காவில் பத்து நாட்கள் சிகிச்சை  பெறச் சென்றுள்ள நடிகர் விஷால்! 

உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் விஷால் அமெரிக்காவில் பத்து நாட்கள் தங்கி சிகிச்சை  பெறச் சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 25 பிப்ரவரி, 2018 at 2:55 PM
பகிர்:

சென்னை: உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் விஷால் அமெரிக்காவில் பத்து நாட்கள் தங்கி சிகிச்சை  பெறச் சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் மாறுகண் உள்ளவராக நடிகர் விஷால் நடித்தார். அப்போழுது கண்ணை மிகவும் சிரமப்படுத்தி நடித்ததன் காரணமாக அதன்பிறகு அவருக்கு அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்பட்டது. அத்துடன் துப்பறிவாளன்’ படத்தில் சண்டைக்காட்சி ஒன்றில் நடித்த போது தோள் மூட்டில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் சண்டக்கோழி-2 படப்பிடிப்பில் இருந்த பொழுது தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

Advertisement

இந்நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக மேல்சிகிச்சைக்காக நடிகர் விஷால் அமெரிக்கா சென்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  அங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விஷால் தற்பொழுது  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தோள் மூட்டு வலி மற்றும் தொடர்ந்து வாட்டும் தலைவலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து 10 நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.