தன்னுடைய அழகான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவு செய்த ஸ்ரீதேவி!
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவு செய்வது ஸ்ரீதேவியின் வழக்கம்....
இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவு செய்வது ஸ்ரீதேவியின் வழக்கம். சமீபகாலங்களில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்: