செய்திகள்

இரவில் நடைபெறும் சம்பவங்களின் கதை இது! ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ இயக்குநர் மு.மாறன் பேட்டி!

சினேகா

மாறன் இயக்கத்தில், சாம் சி.எஸ். இசையமைப்பில், அருள்நிதி, ஆனந்த்ராஜ், அஜ்மல், மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. தனது முதல் படத்தைப் பற்றி இயக்குனர் மு. மாறன் கூறியது,

‘நான் பத்திரிகையாளராக பலவருடம் பணிபுரிந்த பின் திரைத்துறைக்கு வந்துள்ளேன். என்னுடைய முதல் படம் த்ரில்லர் ஜானரில் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ஹீரோ ஒரு கால் டாக்ஸி ட்ரைவர். ஓரிரவு எதிர்பாராத விதமாக அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து அவர் எப்படி தப்புகிறார் என்பதை மையமாக வைத்துத்தான் இதன் திரைக்கதையை உருவாக்கினேன். இதிலுள்ளெ மெசேஜ் என்னவென்றால், யாரையுமே ஈஸியா நம்பிடாதீங்க. நல்லவங்களா இருக்குறவங்களுக்குக் கெட்ட சகவாசம் கிடைச்சதும், அவங்களும் கெட்டவங்களா மாற வாய்ப்பு நிறையா இருக்கு. என்பதுதான்.

இந்தப் படத்தில் அருள்நிதி முற்றிலும் வேறாக தன்னை உருமாற்றிக் கொண்டு நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் வித்யாசமாக அமைத்துள்ளேன்’ என்றார் மாறன். மேலும் அவர் கூறுகையில், 'ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்தான் இப்படத்தை நான் நினைத்த வகையில் இயக்க முடிந்தது என்றார். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள்’ என்று கூறினார்.

இந்தப் படத்தில் அருள்நிதி, மகிமா காதல் காட்சிகளை அழகியலுடன் அமைத்திருக்கிறாராம் இயக்குநர். விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அரவிந்த் சிங் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார் என்றார் புதுமுக இயக்குனர் மு.மாறன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT