முகப்பு
செய்திகள்

முருகதாஸ் இயக்கும் விஜய் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை: அதிகாரபூர்வ அறிவிப்பு

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:52 AM
பகிர்:

விஜய்-யின் அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படக்குழு குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். கதாநாயகி குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை. நடிகர்களில் விஜய் மற்றும் யோகி பாபு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். 

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.

இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி, தீபாவளி அன்று படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →