செய்திகள்

பிப்ரவரி 9 அன்று வெளிவர போட்டி போடும் படங்கள்!

எழில்

பொங்கல் சமயத்தில் முதலில் ஐந்து படங்கள் வெளிவருவதாக இருந்தன. ஆனால் தற்போது தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி என மூன்று படங்களே வெளிவருகின்றன.

இந்நிலையில் பிப்ரவரி 9 அன்று நான்கு படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன.

பாலா இயக்கியுள்ள நாச்சியார், விஜய் இயக்கியுள்ள கரு, ஜீவா நடித்துள்ள கீ, மிஸ்கின், ராம் நடித்துள்ள சவரக்கத்தி ஆகிய நான்கு படங்கள் பிப்ரவரி 9 அன்று வெளிவருவதாக அறிவித்துள்ளன.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா.

சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் கரு படத்தை இயக்கியுள்ளார் விஜய். லைக்கா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா, ஆர்ஜே பாலாஜி நடிப்பில் காலீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கீ. இசை - விஷால் சந்திரசேகர். 

மிஷ்கின், ராம், பூர்ணா நடிப்பில் ஜிஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சவரக்கத்தி.

இந்த நான்கு படங்களும் பிப்ரவரி 9 அன்று வெளியாகவுள்ள நிலையில் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், சுந்தர் சி.-யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் ஜனவரி 26 அன்று வெளிவரவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT