முகப்பு
செய்திகள்

இன்று மூன்று படங்கள் வெளியீடு!

முதலில் ஐந்து படங்கள் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில் இன்று மூன்று படங்கள் மட்டுமே...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:58 AM
பகிர்:

இன்று மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி. முதலில் ஐந்து படங்கள் வெளிவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில் இன்று மூன்று படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் கதைக் களம் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ளார். வட சென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவரின் பின்னணிதான் கதைக்களம் இது. காதல், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார்.

எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் - குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ளார்.

இதையடுத்து விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், சுந்தர் சி.-யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் ஜனவரி 26 அன்றும் பாலா இயக்கியுள்ள நாச்சியார், விஜய் இயக்கியுள்ள கரு, ஜீவா நடித்துள்ள கீ, மிஸ்கின், ராம் நடித்துள்ள சவரக்கத்தி ஆகிய நான்கு படங்கள் பிப்ரவரி 9 அன்றும் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.