செய்திகள்

விஜய் - முருகதாஸ் படம் தொடங்கியது: தீபாவளி வெளியீடு!

எழில்

விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

விஜய்-யின் அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு மீண்டும் இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்றவுள்ளார்கள். நடிகர்களில் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படமிது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. பைரவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

படத்தொடக்கவிழாவை முன்னிட்டு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனிய தீபாவளி வாழ்த்துகள் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து விஜய் படம் தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்துள்ளார் முருகதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT