செய்திகள்

சீனாவில் வெளியான சீக்ரெட் சூப்பர் ஸ்டார்: டங்கல் படத்தின் முதல் நாள் வசூல் முறியடிப்பு!

சீனாவில் வெளியாகியுள்ள அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் முதல் நாளன்றே வசூலில் சாதனை படைத்துள்ளது...

எழில்

சீனாவில் வெளியாகியுள்ள அமீர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படம் முதல் நாளன்றே வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் இதற்கு முன்பு சீனாவில் வெளியான அமீர் கான் படங்களான பிகே, டங்கல் ஆகியவற்றை விடவும் அதிக வசூலை அடைய வாய்ப்புள்ளது.

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான டங்கல் படம் கடந்த வருடம் சீனாவில் வெளியானது. Shuai Jiao Baba என்கிற பெயரில் சீனாவில் வெளியான டங்கல் படம் சீனாவில் முதல் வாரம் ரூ. 187 கோடியை வசூலித்தது. சீனாவில் இந்தியப் படங்கள் எதுவும் எட்டாத ஓர் உயரம். பிறகு சீனாவில் மட்டும் ரூ. 1000 கோடி வசூலித்தது. இந்தியாவிலேயே இந்த வசூலை அடையாத டங்கல் படம் சீனாவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியது. சீனாவில் ஹாலிவுட் படமாக அல்லாத ஒரு படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால் அது டங்கல் படம் தான். இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை விடவும் 10 மடங்கு வசூலித்தது டங்கல். 

அமீர் கான் நடித்து தயாரித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அத்வைத் சந்திரன் இயக்கத்தில் ஜைரா வாசிம், அமீர் கான் நடித்த இந்தப் படம் தற்போது சீனாவில் வெளியாகி பல சாதனைகளைப் படைக்கும் முனைப்பில் உள்ளது. 

சீனாவில் நேற்று வெளியான சீக்ரெட் சூப்பர் ஸ்டார், முதல் நாள் வசூலாக ரூ. 43.35 கோடியை அடைந்து சீனாவில் திரைப்படங்களின் வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த முதல் நாள் வசூல் டங்கலின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். பிகே, டங்கல் படங்களினால் சீனாவில் அமீர் கானின் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் சீனாவில் டங்கல் படம் வசூலித்ததை விடவும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் அதிகமாக வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT