விக்ரம் - அக்ஷரா ஹாசன் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் கமல்!
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்...
கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
கமல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அவருடைய சீடரான ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். விக்ரம் ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கவுள்ளார்.
இந்தப் படம் குறித்து கமல் கூறியதாவது:
திரு.விக்ரம், செல்வி. அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம் என்று கூறியுள்ளார்.