முகப்பு
செய்திகள்

நடிகர் சௌந்தரராஜா – தொழிலதிபர் தமன்னா நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்)

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:02 PM
பகிர்:

சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்துக்குப் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

செளந்தரராஜாவுக்கும் “க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்“ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் தொழிலதிபர் தமன்னாவுக்கும் மே மாதம் மதுரை, உசிலம்பட்டியில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.