செய்திகள்

காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை எச்சரித்த சூர்யா: ஏன் தெரியுமா? (விடியோ இணைப்பு) 

ஆந்திராவில் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை நடிகர் சூர்யா எச்சரித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

DIN

ஹைதராபாத்: ஆந்திராவில் காரிலிருந்து இறங்கி நடுரோட்டில் ரசிகர்களை நடிகர் சூர்யா எச்சரித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா இயல்பிலேயே பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிக்கக் கூடியவர். அத்துடன் தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஆனால் அவரே ரசிகர்கள் மீது கோபப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தனது திரைப்படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா ஆந்திரா சென்றிருந்தார். நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா தனது காரில் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காரின் பின்னால் பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் சூர்யாவின் காரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.

இதனால் அதிருப்தியடைந்த சூர்யா தனது காரை நடு ரோட்டில் நிறுத்தி இறங்கி வந்து பைக்குகளில் பின்தொடர்ந்த ரசிகர்களைக் கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்ட வேண்டாம் எனவும், அவர்களது உயிர் முக்கியம் எனவும் அறிவுரை கூறியிருக்கிறார். 

சூர்யாவின் இந்த வீடியோவானத்து தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் காதல்... ஷிவாங்கி வர்மா!

ஆதாரங்களுடன் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி! | EPS

ராணுவத் தலைமைத் தளபதிக்குத் திலகமிடலாமா? வைரலாகும் விடியோ சர்ச்சை!

விடைபெற்றார் ரோஹன் போபண்ணா... அனைத்துவித டென்னிஸ் போட்டிகளில் ஓய்வு!

42 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

SCROLL FOR NEXT