விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புதிரை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் விஷால், விஷாலின் அம்மா லட்சுமிதேவி, தந்தை ஜி.கே. ரெட்டி, இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் ராஜ் கிரண், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
விஷால் இந்நிகழ்ச்சியில் பேசிய போது, ‘சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது, அது மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்’. என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய ராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன்.
இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்சனையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார்.
என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யற அனைவரும் அரசியல்வாதிகள்தான். இரும்புத்திரை என்னுடைய 24-வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி’ என்று முடித்தார் விஷால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.