செய்திகள்

‘புதிய முகம்’ ஏ.ஆ.ர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும்: சுரேஷ் மேனன் ஆதங்கம்!

புதிய முகம் குறித்து ரோஜா படத்துக்கு வெகுகாலம் முன்பே விவாதித்தோம்... 

எழில்

புதிய முகம் படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் அதுவே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும் என இயக்குநரும் நடிகருமான சுரேஷ் மேனன் கூறியுள்ளார்.

புதிய முகம் 2 படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சுரேஷ் மேனன், 1993-ல் வெளியான புதுமுகம் படம் குறித்து ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

புதிய முகம் 2 பட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்னும் வேகமாகச் செல்லும் படமாக அமைய முயற்சி செய்வேன். ஒரே உயரம் கொண்ட இரு கதாநாயகர்கள் நடிப்பார்கள். (புதிய முகம் படத்தில் நடித்த வினீத்தும் சுரேஷ் மேனனும் வெவ்வேறு உயரம் கொண்டவர்கள்). படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

1993-ல் வெளியான புதிய முகம் குறித்து சில விஷயங்கள். 

ஆரம்பத் தடங்கல்களுக்குப் பிறகு படம் நன்றாக வந்தது. முன்னணி கதாநாயகர்கள் சிலரிடம் நடிக்கக் கேட்டேன். அவர்கள் நடிக்க மறுத்த பிறகே நான் நடித்தேன். 

அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் புதிய முகம் படம் ஏ.ஆர். ரஹ்மானின் முதல் படமாக இருந்திருக்கும். ஏனெனில் புதிய முகம் குறித்து ரோஜா படத்துக்கு வெகுகாலம் முன்பே விவாதித்தோம். 

கலை இயக்குநர் சாபு சிரிலின் முதல் படம் அதுதான் என நினைக்கிறேன்.

ஒளிப்பதிவாளர் முத்து கணேஷின் முதல் படம்.

பாடல்கள் - வைரமுத்து, சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா. அரவிந்த் சாமி எனக்காக டப்பிங் செய்தார். வினீத்துக்கு விக்ரம் குரல் கொடுத்தார். ரகுவரன் சிறிய வேடத்தில் நடித்தார். 1983 கலவரத்துக்குப் பிறகு இலங்கையில் முழு படப்பிடிப்பும் நடைபெற்ற படம். நல்ல நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தானாக அமைந்தார்கள். நான் அதிர்ஷ்டம் செய்தவன். பெருமைப்படுகிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT