செய்திகள்

தானா சேர்ந்த கூட்டம்: டப்பிங் குறித்து சுரேஷ் மேனன் அதிருப்தி!

தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள குரலை விடவும் அந்தக் கதாபாத்திரத்துக்கு என் குரல் பொருத்தமாக இருக்கும்...

எழில்

சமீபத்தில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சுரேஷ் மேனன் நடித்திருந்தார். அவருக்கு இயக்குநர் கெளதம் மேனன் குரல் கொடுத்திருந்தார்.

ஆனால் இதற்குத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ் மேனன். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் என்னுடைய சொந்தக் குரல் ஏன் இல்லை என்று கேட்பவர்களுக்காக - நான்தான் முதலில் டப்பிங்கில் பேசினேன். ஆனால் அது பிறகு வேறொருவரால் டப் செய்யப்பட்டு புதிய குரலுடன் படம் வெளியாகியுள்ளது. தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள குரலை விடவும் அந்தக் கதாபாத்திரத்துக்கு என் குரல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். படம் பார்த்தவர்கள் இதுகுறித்த கருத்தை எனக்குத் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி டேட்டிங் செயலி மூலம் மோசடி: உகாண்டா நபா் கைது

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

SCROLL FOR NEXT