முகப்பு
செய்திகள்

சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன்! பதிலடியாக சூரி சொன்னது என்ன? கலகலக்கும் டிவிட்டர் பதிவுகள்

நகைச்சுவை நடிப்பில் கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகர் சூரி. சமீப காலமாக சமூக

Updated On : 26 ஜனவரி, 2018 at 4:43 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:33 PM

நகைச்சுவை நடிப்பில் கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகர் சூரி. சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக பங்கேற்று வருகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுயமி படங்களையும் காமெடி பதிவுகளையும் எழுதி வருகிறார்.

தற்போது சூரி கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தனது டிவிட்டரில், ‘இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி…(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்)’ என்று ஒரு ட்வீட் செய்திருந்தார் சூரி. 

அதற்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் ‘என்ணன்னே க்ளாஸ்மேட்ஸ் கூட கெட் டு கெதரா’ என்றும் 'அந்த வெள்ளந்திச்சிரிப்பு உனக்கு ரேபான் கூலர்ஸ் போட்டாதான் தெரியுமா!?'  என்றும் கலாய்த்து கேள்விகள் கேட்க அதற்குச் சூரி, ‘யெஸ் யெஸ் ஆனா அவங்க என் டாடியோட க்ளாஸ்மேட்ஸ் பங்கு’ என்று சூரி பதில் போட்டுள்ளார். திரையில் மட்டுமல்லாமல், நேரிலும் இப்படி சோஷியல் மீடியாவிலும் தங்கள் நட்பை பேணி வருகிறார்கள் சூரி - சிவகார்த்திகேயன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.