பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும் கயல் படப் புகழ் சந்திரனுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டார் அஞ்சனா.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்படைந்தார். தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அஞ்சனா சந்திரன் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுகப் பிரசவம் என்பதால் மருத்துவமனையிலிருந்து அஞ்சனா வீட்டுக்கு வந்துவிட்டால், தாயும் சேயும் நலம் என்று சந்திரன் தனது ட்விட்டரில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.