பாங்காக் நகர வீதிகளில் சுற்றித் திரியும் ஆரவ்-ஓவியா: மீண்டும் துளிர்த்த காதல்?
பிக் பாஸ் சீசன் ஒன்றின் புகப்பெற்ற காதல் ஜோடியான நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவரும், பாங்காக் நகர வீதிகளில் ஜோடியாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சென்னை: பிக் பாஸ் சீசன் ஒன்றின் புகப்பெற்ற காதல் ஜோடியான நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவரும், பாங்காக் நகர வீதிகளில் ஜோடியாக சுற்றித் திரியும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற 'பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் ஒன்றில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவருக்குமான காதல் பிரபலமான ஒன்றாகும். . முதலில் ஆரவ்வை ஓவியா காதலித்தார். இதற்கு ஆரவ் மறுப்பு தெரிவிக்கவே, ஓவியா தற்கொலை முடிவுக்கே சென்றார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இறுதியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றிபெற்றார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் ஆரவ்-ஓவியா இருவரும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து அப்போதே கிசுகிசுக்களும் வெளியானது.
Advertisement
இந்நிலையில் நடிகை ஓவியா மற்றும் ஆரவ் இருவரும், பாங்காக் நகர வீதிகளில் ஜோடியாக சுற்றித் திரியம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக இவர்களது காதல் மீண்டும் மலர்ந்துள்ளதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.