செய்திகள்

கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

எழில்

கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துக்கு ஆட்-பீரோ' விளம்பர நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்நிலையில், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ' நிறுவனம் புகார் அளித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடுத்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பின்னர் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லதா ரஜினிகாந்த் தலைமையிலான குளோபல் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகை ரூ. 6. 20 கோடியை ஆட் -பீரோ' நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர். பானுமதி அமர்வு முன் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட் -பீரோ' நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் இன்னும் வழங்கவில்லை' என்றார். 

இதையடுத்து, நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆட் பீரோ' நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை லதா ரஜினிகாந்த் ஏன் வழங்கவில்லை?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது லதா ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன், லதா ரஜினிகாந்தின் ஒப்புதல் இல்லாமல் உறுதிமொழியை முன்பிருந்த வழக்குரைஞர் பதிவு செய்துள்ளார்' என்றார். இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் ஜூலை 10-ஆம் தேதி இறுதி விசாரணையின் போது பணத்தை திரும்பச் செலுத்த தயாராக உள்ளீர்களா என்பது குறித்து இறுதியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு குறித்த விசாரணையைத் தொடர உத்தரவிட வேண்டி வரும்' என்றுஎச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து,வழக்கின் இறுதி விசாரணை வருகிற ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிற பெங்களூர் நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. லதா ரஜினிகாந்த், பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT