முகப்பு
செய்திகள்

அடுத்தடுத்த நாளில் மோதும் தமிழ்ப்படம் 2 & கடைக்குட்டி சிங்கம்!

இவ்விரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவது திரையுலகினரிடையே அதிருப்தியை உருவாக்கினாலும்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:11 PM
பகிர்:

தமிழ்ப்படம் 2 & கடைக்குட்டி சிங்கம்.

இந்த இரு படங்களும் இந்த வார இறுதியில் வெளியாகவுள்ளன.

கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் ஜூலை 13 அன்றும் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 அன்றும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவது திரையுலகினரிடையே அதிருப்தியை உருவாக்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்த நாள்களில் வெளியாகின்றன.

Advertisement

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது. 

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். 

சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப் படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை - என். கண்ணன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments