காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2, தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது...
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப்படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ், டிஷா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் 2 படத்தை சி.எஸ். அமுதன் இயக்கியுள்ளார். இசை - என். கண்ணன்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2, தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்று அதிகக் கவனத்தை இந்தப் படம் ஈர்த்துள்ளது. சென்னை ரோஹிணி திரையரங்கில் இன்று காலை 5 மணிக்குத் தொடங்கிய காட்சிக்கு நேரில் வருகை தந்து ரசித்தார் படக்கதாநாயகன் சிவா.