செய்திகள்

முதல்முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் சிம்ரன்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்ரன் பலவருடங்களாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்தாலும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்... 

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடித்துவருகிறார். ரஜினியின் உறவினரான அனிருத், முதல்முறையாக ரஜினி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயண் தான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மூலமாக முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜும் அனிருத்தும் இணைகிறார்கள். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மேலும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கியும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

சிம்ரன் பலவருடங்களாகத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவந்தாலும் இந்தப் படத்தில்தான் முதல்முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார். சந்திரமுகி படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஜோதிகா அந்த வேடத்தை ஏற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை மிரட்டல் விடுத்த எஃப்.ஜே.! பிக் பாஸிடம் கதறிய திவாகர்!

இந்த வாரம் ஓடிடியில்... பட்டய கிளப்பும் படங்கள்!

பல்கலை. பேராசிரியர்கள் மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!

அருங்காட்சியகமாகிறதா, ரவீந்திரநாத் தாகூரின் வீடு?

தந்தை அறிமுகமான நாளில் பைசனுடன் வரும் துருவ் விக்ரம்!

SCROLL FOR NEXT