செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’: மதுரையில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழா!

இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற திவாகர், செந்தில் ஆகியோர்... 

எழில்

பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடித்துள்ளார். 

சீமராஜா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இசை - இமான், ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், பாடல்கள் - யுகபாரதி. விநாயகர் சதுர்த்தி அன்று (செப்டம்பர் 13) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் ஆகஸ்ட் 3 அன்று நடைபெறவுள்ளது. வரேன் வரேன் சீமராஜா என்கிற பாடல் மட்டும் ஜூலை 25 அன்று வெளியிடப்படவுள்ளது. இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற திவாகர், செந்தில் ஆகியோர் பாடியுள்ளதாக இமான் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT