முகப்பு
செய்திகள்

ராஜாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்: பாலா பட இசையமைப்பாளர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

பாலாவின் படங்களுக்கு வழக்கமாக இளையராஜாவே இசையமைப்பார், சில படங்களைத் தவிர...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதியுள்ளார்.

வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.

Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். இதையடுத்து அது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார்.

பாலாவின் படங்களுக்கு வழக்கமாக இளையராஜாவே இசையமைப்பார், சில படங்களைத் தவிர (நந்தா, அவன் இவன் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவும் பரதேசி படத்துக்கு ஜிவி பிரகாஷும் இசையமைத்தார்கள்). பாலா இயக்கியுள்ள சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்காதது, அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments