செய்திகள்

50 நாள்களுக்குப் பிறகு, அமேஸான் பிரைமில் வெளியானது ரஜினி நடித்த ‘காலா’

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு... 

எழில்

ரஜினிகாந்த் நடித்த காலா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். இசை - சந்தோஷ் நாராயணன்.

வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படம் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தரும் அமேஸான் பிரைம், ரஜினி - பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள காலா படத்தை இன்று வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றில் அமேஸான் பிரைம் வழியாகப் படம் பார்க்கமுடியும். சமீபத்தில் தனது 50-வது நாளைக் கொண்டாடியது காலா படம். இந்நிலையில் 52-வது நாளில் அமேஸான் பிரைமில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT