செய்திகள்

ஹாரி பாட்டர் பட நடிகருக்கு டும் டும் டும்!

ராக்கி

ஹாரிபாட்டர் படம் முதல் புத்தகமான The Philosopher’s Stone வெளிவந்து கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஜே.கே.ரெளலிங் எழுதிய அப்புத்தகம் உலகப் புகழ்ப்பெற்று இன்று வரை பெஸ்ட் செல்லராக திகழ்ந்து வருகிறது. மேஜிகல் ரியலிசம் வகைமையில் எழுதப்பட்ட அப்புத்தகம் 2001-ம் ஆண்டு திரையாக்கம் பெற்று சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரின்  உள்ளத்தையும் கொள்ளை கொண்டது.

முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை அப்படத்தி வரும் மாயாஜாலக் காட்சிகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்திவிடும். போலவே அக்கதையில் வரும் ஒரு கதாபாத்திரமான நெவில் லாங்பாட்டமையும் (Neville Longbottom) கூட மறந்திருக்க முடியாது. 

அப்பாட்திரத்தை ஏற்று நடித்த மேத்யூ லூயிஸ் சிறு வயதிலிருந்து ஹாரி பாட்டர் படத்தில் நடிக்க தொடங்கியவர். சிறுவனாக இருந்த மேத்யூ வளர்ந்து இளைஞராக ஹாரி பாட்டரில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அது தவிர்த்து சில ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் மேத்யூ  தன் தோழியான ஏஞ்சலா ஜோன்ஸ் என்பவரை அண்மையில் திருமணம் செய்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண உடையுடன் புகைப்படத்தை வெளியிட, அவரது ரசிகர்கள் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை மத பிரச்னையாக்குகிறது திமுக அரசு: செல்லூா் கே. ராஜூ

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

SCROLL FOR NEXT