முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் பட டீசர்!

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

"அட்டகத்தி', "மெட்ராஸ்', "கபாலி' ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், "பரியேறும் பெருமாள்' என்ற படத்தை தயாரித்துள்ளார். 

இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். 

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது.  காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.  கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →