முகப்பு
செய்திகள்

சென்னையின் இரு பிரபல திரையரங்குகளில் காலா வெளியாகவில்லை: ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னையின் இரு பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா படம் வெளியாகவில்லை...

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை வெளியாகவுள்ளது.

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சென்னையின் இரு பிரபல திரையரங்குகளான உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா படம் வெளியாகவில்லை. இதற்கான காரணமாக தனுஷின் பட நிறுவனம் அளித்த பதில்: 

இதர திரையரங்குகள் ஏற்றுக்கொண்ட வியாபார ஒப்பந்தத்தை ஒப்புக் கொள்ளாததால் மட்டுமே உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. மற்றபடி அதிகத் தொகை கேட்டதாக வெளியான செய்திகள் உண்மையல்ல, அவை அடிப்படை ஆதாரமற்றவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க வேண்டும் என்கிற நெருக்கடி உருவானதால் இத்திரையரங்குகளில் காலா படம் வெளியாகவில்லை என்றொரு செய்தி இன்று பரவியது. இதையடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாளை உதயம் திரையரங்கில் ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் (உதயம்), இரும்புத்திரை (சூரியன்), ஒரு குப்பைக் கதை (சந்திரன்), செம (மினி உதயம்) ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. கமலா திரையரங்கில் ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படம் நாளை திரையிடப்படுகிறது.

எல்லாத் தரப்பு மக்களும் செல்லக்கூடிய, சென்னையின் மையப்பகுதிகளில் அமைந்துள்ள உதயம் மற்றும் கமலா திரையரங்குகளில் காலா படம் வெளியாகாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments