செய்திகள்

கன்னட நடிகரை சென்னையில் கைது செய்தனர்! இதுதான் காரணம்

ராக்கி

சாண்டல்வுட்டில் மாஸ்தி குடி என்ற பெயரில் ஒரு படம் கட்ந்த மாதம் வெளியானது. இதில் நடிகர் துனியா விஜய், அமுல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர் கெளடா என்பவர் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த போது எதிர்பாராத விதமாக அனில் ராகவ் மற்றும் உதய் எனும் இரண்டு நடிகர்கள் ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீரில் விழுந்து மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களை கன்னட போலீஸார் மீட்டனர்.

இது தொடர்பாக சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜராக கூறப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரை போலீசார் கைது செய்ய வந்தனர். அப்போது அவர் துனியா விஜயுடன் பேசிக் கொண்டிருந்தார். போலீஸார் வந்தபோது உடை மாற்றிக் கொண்டு வருவதாகச் சொல்லிய அவர், நொடிப் பொழுதில் தப்பிவிட்டார். அவரை துனியா விஜய் தப்ப வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரும் காணாமல் போகவே இருவரையும் பங்களூரு போலீஸ் தேடி வந்தது. போலீஸார் காரணத்தால் கோர்ட் சம்மன் ஒருவரை தப்ப வைத்த துனியா விஜய்யை பங்களூரு போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர். 

இந்தச் சம்பவம் கன்னடத் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT