முகப்பு
செய்திகள்

இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்குமா அம்மா?: நடிகை சரண்யாவிடம் கவலையோடு கேட்ட விஜய் சேதுபதி!

ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படிப் பெருமிதமாக பார்த்துக் கர்வப்பட்டு கொள்வாரோ...

Updated On : 30 ஜனவரி, 2024 at 3:57 PM
பகிர்:

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு நடித்துள்ள படம் - ஜுங்கா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் கோகுல். கதை பிடித்திருந்ததால் இந்தப் படத்தைத் தானே தயாரித்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தின் 60% காட்சிகள் பிரான்சில் படமாக்கப்பட்டுள்ளன.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சாயிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசியதாவது:

Advertisement

விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தபோது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா? எனக் கேட்டார். அதற்கு நான், உனக்கென்னப்பா குறை? பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன்.

ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படிப் பெருமிதமாக பார்த்துக் கர்வப்பட்டு கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments