செய்திகள்

நடிகர் உதயநிதியின் கண்ணே கலைமானே முதல் லுக் போஸ்டர் வெளியானது!

சினேகா

மலையாளத்தில் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் தமிழ் மறு உருவாக்கமான ‘நிமிர்’ படத்தில் நடித்திருந்தார் உதயநிதி. அதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் அவருடன் தமன்னா, வடிவுக்கரசி, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இப்படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பிஎஸ்சி அக்ரி படிப்பு முடித்த பட்டதாரியாக நடித்துள்ளாராம் உதயநிதி. இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT