செய்திகள்

தனது அடுத்த படத்தை பாலிவுட்டில் எடுக்கிறாரா பா.ரஞ்சித்?

காலாவை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்

சினேகா

காலாவை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இந்திப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கபாலி, காலா என தொடர்ந்து இரண்டு தடவை சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்துவிட்ட ரஞ்சித். அடுத்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு திரை ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார் ரஞ்சித். 

இந்நிலையில் ரஞ்சித்துக்கு தற்போது பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து பா.ரஞ்சித் கூறுகையில் இந்திப் படம் இயக்க கேட்டுள்ளார்கள், ஆனால் இன்னும் நான் முடிவெடுக்கவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

இது ஒரு புறமிருக்க, ரஞ்சித் அடுத்து நடிகர் விஜயுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். இந்தப் படத்தில் விஜய் குத்துச் சண்டை வீரராக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதையை மெட்ராஸ் படத்தைப் போல விறுவிறுப்பாக வடிவமைத்துள்ளாராம் ரஞ்சித். வித்யாசமான விஜய்யை இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்கிறார்கள். முதல் முறையாக ரஞ்சித் விஜய் இணையவிருப்பதால், இந்தப் புதிய கூட்டணிக்கான எதிர்ப்பார்ப்பும் இப்போதே தொடங்கிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT