முகப்பு
செய்திகள்

சூப்பர் ஹிட் படமான 'டங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் இதுதான்!

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘டங்கல்’. அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில்

Updated On : 22 ஜூன், 2018 at 4:02 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:31 PM

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பாலிவுட் படம் ‘டங்கல்’. அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானதுஇந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மல்யுத்த வீரரான அமிர் கானுக்கு, நான்கு பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். தோல்வியுற்ற ஒரு மல்யுத்த வீரரான அவருக்கு தன்னால் நாட்டுக்கு ஒரு தங்கப் பதக்கம் கூட வாங்கித் தர முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறமும், மகன் பிறந்தால் அவனை ஒரு மல்யுத்த வீரனாக்கலாம் என்ற கனவும் தகர்ந்து போக மனம் உடைந்து போகிறார். குழந்தைகள வளர அவர்களுள் இரண்டு மகள்களுக்கு மல்யுத்தத்தில் ஆர்வம் இருப்பது அறிந்து, தினமும் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து, தன்னுடைய கனவை நிறைவேற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. நாட்டுப்பற்று, விளையாட்டுக்கு தரப்படாத முக்கியத்துவம் என பல விஷயங்களை உள்ளடக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளைப் படைத்தது.

இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் நிதேஷ் திவாரி அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்று பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகமே எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பாக்ஸ் ஸ்டார் மற்றும் சாஜித் நாடியத்வாலா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகர் நடிகைகள் உள்ளிட்டவர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் பட டைட்டில் முதல் நடிப்பவர்களின் விபரங்கள் அதிகாரபூர்வமாக வெளிவரும் என்றும் இந்தப் படத்தை 2019-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி ரிலீஸ் செய்வோம் என்றும் அறிவித்துள்ளது தயாரிப்பாளர் தரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.