செய்திகள்

கேக் வெட்டு! கொண்டாடு! விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சிக்குக் காரணம் இதுதான்! (படங்கள்)

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

சினேகா

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி - விஷால் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து சண்டகோழி 2-வை உருவாக்கி வருகிறார்கள்.

ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. 

இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களின் சமீபத்திய படங்களின் (இரும்புத் திரை, நடிகையர் திலகம்) வெற்றியை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் இரண்டு கேக்குகளை வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவர்கள் வெட்டிய கேக்கில் ப்ளாக் பஸ்டர் என எழுதப்பட்டு அவரவர் படங்களின் பெயர் போடப்பட்டிருந்தது.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

SCROLL FOR NEXT