செய்திகள்

பிரபல நடிகருக்கு நெஞ்சு வலி! விமானப் பயணத்தின் போது விபரீதம்! 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் கேப்டன் ராஜு.

ராக்கி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் கேப்டன் ராஜு. இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். கொச்சியிலிருந்து திங்கள் கிழமை அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் பயணித்த விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தர்மத்தின் தலைவன், சின்னப்பதாஸ் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் கேப்டன் ராஜ். அனைத்து மொழிகளிலும் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் கேப்டன் ராஜு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT