செய்திகள்

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட திரையுலகப் பிரபலங்களில் கமல், சமந்தாவுக்கு முதல் இடம்!

ஜனவரி முதல் மே மாதம் வரை ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் கமல் ஹாசன், சமந்தாவுக்கு முதல் இடம்...

எழில்

கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் கமல் ஹாசன், சமந்தாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. 

தமிழ்த் திரையுலகின் நடிகர்கள் பிரிவில் கமலுக்கு முதல் இடமும் ரஜினிக்கு இரண்டாம் இடமும் மூன்றாம் இடம் சூர்யாவுக்கும் கிடைத்துள்ளன. நான்கு, ஐந்து இடங்கள் பிரகாஷ் ராஜுக்கும் அனிருத்துக்கும் கிடைத்துள்ளன. 

காவிரி விவகாரம், விஸ்வரூபம் 2 படம், மக்கள் நீதி மய்யம் தொடர்பான தகவல்கள் போன்ற காரணங்களால் கமலுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. ரஜினியை விடவும் கமல் ட்விட்டரில் தொடர்ந்து இயங்குவதால் பல பிரச்னைகளில் கருத்து சொல்வதாலும் கமல் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. ஆகவே முதல் இடம்.

தமிழ்த் திரையுலகின் நடிகைகள் பிரிவில் சமந்தாவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அடுத்த நான்கு இடங்களை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், தமனா ஆகியோர் பிடித்துள்ளார்கள். இத்தகவல்களை ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT