செய்திகள்

தமிழ் இலக்கியம், இலக்கணம் போன்று வேறு எந்த மொழியிலும் இல்லை: ‘மிஸ் இந்தியா' அனுகீர்த்தி

தமிழ் மொழியைக் கற்பது கடினம். பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்...

எழில்

திருச்சியைச் சேர்ந்த அனு கீர்த்தி மிஸ் இந்தியா பட்டத்தைச் சமீபத்தில் வென்றார். 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அனுகீர்த்தி கூறியதாவது:

தமிழ்நாட்டுப் பெண் மிஸ் இந்தியா பட்டம் வென்றார் என்றுதான் செய்திகளில் வந்தன. இதற்காகப் பெருமைப்படுகிறேன். தமிழில் உள்ள இலக்கியம், இலக்கணம் பொன்று வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியைக் கற்பது கடினம். பிற மொழிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொள்ளலாம். தமிழர்கள் எங்குச் சென்றாலும் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். எனக்கு ஹிந்தி தெரியாது. சில வார்த்தைகள் மட்டும் தான் தெரியும்.

திருநங்கைகள் உரிமைகளுக்காகப் பணியாற்றி வருகிறேன். திருநங்கைகள் மீதான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். அம்மா என்னைத் தைரியமான பெண்ணாக வளர்த்தார். கட்டுப்பாடுகளுடன் என்னை வளர்த்திருந்தால் என்னால் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. 

அழகிப் போட்டியில் வெல்வோர் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். சீனாவில் நடைபெறவுள்ள உலக அழகிப் போட்டிக்குத் தயாராகி வருகிறேன். உலக அழகிப் போட்டி முடிவடைந்த பிறகே படிப்பைத் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT