முகப்பு
செய்திகள்

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்...

செய்திகள்

அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ பொங்கல் வெளியீடு என இயக்குநர் சிவா அறிவிப்பு!

அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

அஜித் - சிவா மீண்டும் இணையும் படம் - விசுவாசம். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி.

இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு படவிழாவில் இயக்குநர் சிவா கூறியதாவது:

விசுவாசம் படப்பிடிப்பு 40 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார்.

சிவா இயக்கிய வீரம் படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித்.

முழு கட்டுரையைப் படிக்க →