முகப்பு
செய்திகள்

ஆஸ்கர்: சிறந்த படம் - தி ஷேப் ஆஃப் வாட்டர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:24 PM
பகிர்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

சிறந்த திரைப்படத்துக்கான விருதை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் வென்றுள்ளது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் பெற்றுள்ளது.

சிறந்த நடிகை பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி)

சிறந்த நடிகராக கேரி ஓல்டுமேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டார்க்ஸ்ட் ஹவர் படத்துக்காக.

சிறந்த இயக்குநராக கில்லெர்மோ டெல்டோரோ, தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருதை (பிளேட் ரன்னர் 2049) என்ற படத்திற்காக ரோஜர் டிக்கின்ஸ் பெற்றார். 14 முறை பரிந்துரைக்கப்பட்டு முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்றார் ரோஜர் டிக்கின்ஸ்.

சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கிர்க் (லீ ஸ்மித்)

சிறந்த திரைக்கதையாசிரியர்- கெட் அவுட் (ஜோர்டன் பீலே).

சிறந்த தழுவல் திரைக்கதை- கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவரி)

சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர்.

சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (கோகோ). இசையமைப்பு - கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ். 

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049 (ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்).

சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட். விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்.

சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ஃப்ராங்க் ஸ்டீபல்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.