முகப்பு
கிரிக்கெட்

கூப்பர் கானலி ஐபிஎல் 2026ன் கண்டுபிடிப்பு..! சஹால் புகழாரம்!

அறிமுகப் போட்டியில் அசத்திய பஞ்சாப் வீரர் கூப்பர் கானலி குறித்து...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 12:13 PM
கூப்பர் கானலி. - படம்: பஞ்சாப் கிங்ஸ்.
பகிர்:

பஞ்சாப் அணிக்கான அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலிய இளம் வீரர் கூப்பர் கானலி (22 வயது) குறித்து அந்த அணியின் மூத்த வீரர் சஹால், “இந்த சீசனின் கண்டுபிடிப்பு” எனக் கூறியுள்ளார்.

நியூ சண்டீகரில் தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 162 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களை இழந்து 19.1 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் வீரர்கள் திடீரென் ஆட்டமிழக்க, அறிமுக வீரர் கூப்பர் கானலி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார். 44 பந்துகளில் 72 ரன்கள் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தச் சிறபான ஆட்டம் குறித்து அணியின் மூத்த வீரர் யுஸ்வேந்திர சஹால் கூறியிருப்பதாவது:

கூப்பர் கானலிக்கு கிட்டதட்ட 20 வயதுதான் ஆகிறது. ஆனால், அவரிடம் ரன்கள் குவிக்க வேண்டுமென்ற பசி இருக்கிறது. முதல் போட்டியிலேயே நம்.3ல் களமிறங்கி, ஆட்டத்தை வென்று கொடுத்துள்ளார். அதிலேயே அவரது மனநிலையின் பக்குவம் புரிகிறது.

சூழ்நிலை என்னவென்று அவருக்குப் புரிகிறது. அவர் கடைசி வரை இருந்தால் போட்டியை வெல்ல முடியும் என அவருக்குத் தெரிகிறது. அதுதான் அவரது பக்குவம். எங்கள் அணிக்கு அது நல்ல அறிகுறியாக இருக்கிறது. அவரது பேட்டிங்கைப் பார்த்தால், இந்த சீசனின் கண்டுபிடிப்பாக இருப்பார் என நினைக்கிறேன் என்றார்

சஹால் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியுற்றது.

summary

Punjab Kings spinner Yuzvendra Chahal believes young Cooper Connolly will be one of the "finds" of this season, praising the young Australian batter's maturity after he scored a match-winning fifty on his IPL debut.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.