ஆஸ்கர்: விருதுப் பட்டியல்
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் பெற்றுள்ளது...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த திரைப்படத்துக்கான விருதை தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் வென்றுள்ளது.
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த கலை இயக்கம் என நான்கு ஆஸ்கர் விருதுகளை கில்லெர்மோ டெல்டோரோ இயக்கிய தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் பெற்றுள்ளது. இந்தப் படம் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி)
சிறந்த நடிகராக கேரி ஓல்டுமேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டார்க்ஸ்ட் ஹவர் படத்துக்காக.
சிறந்த இயக்குநராக கில்லெர்மோ டெல்டோரோ, தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருதை (பிளேட் ரன்னர் 2049) என்ற படத்திற்காக ரோஜர் டிக்கின்ஸ் பெற்றார். 14 முறை பரிந்துரைக்கப்பட்டு முதல்முறையாக ஆஸ்கர் விருதை பெற்றார் ரோஜர் டிக்கின்ஸ்.
சிறந்த கலை இயக்குநர்- பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ (தி ஷேப் ஆஃப் வாட்டர்
சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் - டன்கிர்க் (லீ ஸ்மித்)
சிறந்த திரைக்கதையாசிரியர்- கெட் அவுட் (ஜோர்டன் பீலே).
சிறந்த ஒலித் தொகுப்பு - டன்கிர்க் (அலெக்ஸ் கிப்ஸன்)
சிறந்த ஒலிக் கலவை - டன்கிர்க்
சிறந்த தழுவல் திரைக்கதை- கால் மி பை யுவர் நேம் (ஜேம்ஸ் ஐவரி)
சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆஃப் வாட்டர்.
சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ (கோகோ). இசையமைப்பு - கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்.
சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் - பிளேடு ரன்னர் 2049 (ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்).
சிறந்த முழுநீள ஆவணப்படம் - இக்காரஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - மார்க் பிரிட்ஜஸ் (ஃபாண்டம் த்ரட்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ (லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன்)
சிறந்த அனிமேஷன் குறும்படம்- டியர் பேஸ்கட் பால் (க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்)
சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட். விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்.
சிறந்த சிகை அலங்காரம்- கஸி ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் (டார்க்கஸ்ட் ஹவர்)
சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல் (திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி)
சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜேனி (ஐ டான்யா)
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்- ஏ ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி) (செபாஸ்டியன் லீலியோ)
சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 (ஃப்ராங்க் ஸ்டீபல்)
கால் மீ பை யுவர் நேம், டார்க்கஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட், லேடி ஃபேர்டு, பாந்தம் திரெட், தி போஸ்ட், தி ஷேப் ஆஃப் வாட்டர், த்ரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி ஆகிய திரைப்படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றன. இதில் தி ஷேப் ஆஃப் வாட்டர் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை என்பது உள்ளிட்ட 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக டன்கிர்க் திரைப்படம் 8 பிரிவுகளிலும், திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங்-மிசெளரி திரைப்படம் 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டன. டன்கிர்க் திரைப்படத்துக்காக பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்திய நடிகர் அலி ஃபசல் நடித்த 'விக்டோரியா அண்ட் அப்துல்' திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த சிகை அலங்காரம், சிறந்த ஒப்பனை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.